யாழ். சுன்னாகம் – அம்பனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியதில் 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தொல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் வாள்வெட்டு நடத்திய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.