யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் பாடசாலைக்குச் சென்ற மாணவி ஒருவர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்வதாக நேற்று முன்தினம் (27-04-2024) வீட்டில் கூறி விட்டு சென்ற மாணவி இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி காணாமல் போனமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.