யாழ்ப்பாண வல்வை தொண்டைமானாற்றில் முதலைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையால் ஆற்றில் நீராடுபவர்கள் அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம் பெற்று வரும் நிலையில் அதிகளவு பக்தர்கள் முருகப்பெருமானை தரிசிக்க நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகை தந்துள்ளனர்.
ஆற்றில் நீராடுபவர்கள் அவதானம்
இந்த நிலையில் செல்வச் சந்நிதி ஆலயத்தின் பின்புறம் உள்ள ஆற்றில் நீராடும் அடியவர்களை அவதானமாக நீராடுமாறு செல்வச் சந்நிதி ஆலய நிர்வாகத்தினர்அறிவித்துள்ளனர்.
ஆற்றில் முதலைகள் இருப்பது தொடர்பில் தகவல் வந்துள்ளதன் காரணமாக ஆற்றில் நீராடும் போது ஆழமான பகுதிகளுக்கு சென்று நீராட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் முருகன் அடியவர்கள் ஆற்றில் போடப்பட்டுள்ள மிதப்பு எல்லைகளுக்கு உள்ளேயும் அதேபோல் மிக அவதானமாகவும் நின்று உதவிக்கு ஆட்களுடன் நின்று மேற்பார்வை செய்து நீராடுமாறும் கேட்டுகொள்லப்பட்டுள்ளனர்.