யாழ்.கோப்பாய் மற்றும் உடுவில் பகுதிகளில் நேற்றய தினம் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
இதன்படி உடுவில் பகுதியில் 11 வயதான சிறுவன் உட்பட 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல் கோப்பாய் பகுதியில் 5வயது, 8 வயது, 11 வயதுடைய 3 சிறுவர்கள் உட்பட
20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைகழக ஆய்வுகூடத்தில் நேற்று இடம்பெற்ற பரிசோதனையின்போதே குறித்த இரு பகுதிகளிலும் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.