யாழில் நெல்லியடி நகரத்தில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள மருந்தகம் ஒன்று நேற்று முன்தினம் (4) இரவு உடைக்கப்பட்டு, பணம் மற்றும் மருந்து வகைகள் திருடப்பட்டுள்ளது.
இரவு நேரம், கடை பூட்டை உடைத்து உள்நுழைந்த திருடன் நீண்டநேரம் மருந்தகத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்துள்ளார். இதன்போது, கடையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானத்தையும் அருந்தினார்.
இது தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருடனின் அடையாளம் தெரிந்தவர்கள், நெல்லியடி பொலிஸ் நிலையம்- 0212263222 அல்லது கடை உரிமையாளரை- 0777353121 தொடர்பு கொண்டு தகவலளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.