இன்றைய தினம் சமூக ஊடகங்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வல்வை முதியோர் இல்லத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் வயதானவர்களிற்கு பழுதடைந்த உணவுப்பண்டங்கள் வழங்கப்படுவது அப்பட்டமாக புரிகின்றது.
தனியார் அமைப்பு ஒன்றினால் நடத்தப்பட்டு வரும் வல்வை முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள முதியோர்களுக்கு கொடுமைகள் இடம்பெறும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.ஒரு முதியவரை குறித்த நிறுவனத்தில் அனுமதிக்க வேண்டுமானால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் அறவிடப்படுவதுடன் மாதம் ஒன்றுக்கு எழுபதாயிரம் ரூபா பணம் அறவிடப்படுகிறது. ஆனால் குறித்த முதியோர் இல்லத்தில் ஆலயங்களில் சமைக்கப்படும் உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சூடாக்கி முதியோர்களுக்கு வழங்கும் காணொளிகளும் அம்பலமாகியுள்ளது.
குறித்த முதியோர் இல்லத்தில் பல முதியவர்கள் பல்வேறு நோய்களுடன் காணப்படும் நிலையில் அவர்களுக்கு பழைய உணவுகளை பரிமாறி அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயற்பாடுகள் இடம் பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது குறித்த இல்லத்தில் கடமையாற்றுபவர்களுக்கு EPF ETF கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகள் தமது பெற்றோர்கள் குறித்த இல்லத்தில் நலமுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை சேர்த்துள்ள நிலையில் குறித்த இல்லத்தில் இடம்பெறும் சம்பவங்கள் அவர்களின் பெற்றோர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்காத நிலையில் காணப்படுகிறது.
குறித்த வல்வை முதியோர் இல்லமானது பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்படாத இல்லம் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இவர்களின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக பிரதேச செயலகம் பதிவை வழங்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
காணொளி இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது