கண்புரை சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களைப் பரிசோதனை செய்து தெரிவுசெய்யும் கண் பரிசோதனை முகாம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
குறித்த பரிசோதனை எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.
இந்த பரிசோதனையில் தெரிவு செய்யப்படும் நோயாளர்களுக்கான கண்புரை (Cataract) சத்திரசிகிச்சை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் மேற்படி கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.