காரைநகர் – ஊர்காவற்றுறைக்கான பாதை சேவையை பயன்படுத்துவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த பாதை சேவையில் ஈடுபடும் பாதையின் தட்டு உடைந்த நிலையில், சேவையில் ஈடுபடுவாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொது மக்களும், அரச சேவையாளர்களும் பயன்படுத்தும் இச்சேவை நீண்ட காலமாக பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனைக் கருத்தில் கொண்டு இந்தப் பாதை சேவையினை சீரமைத்து தருமாறும் அவர்கள் கோருகின்றனர்.
இதுதொடர்பில் ஊர்காவல்துறை பிரதேச செயலர் தெரிவிக்கையில்,
இந்தப் பாதை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினுடையது. பலமுறை திருத்தங்கள் பேற்கொள்ளப்பட்ட நிலையில் தான் இந்தப் பாதை சேவையில் ஈடுபடுகின்றது. சேவையில் உள்ள பாதையினை மாற்றவேண்டிய தேவை இருக்கிறது.
இது தொடர்பில் நானும் கூட்டங்களில் பலமுறை வலியுறுத்தியிருக்கிறறேன். ஆனாலும், தற்போது உடனடியாக இதனை மாற்றம் செய்வதற்கு பாதை வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் நிதி இல்லாதிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.