நாடாளாவிய ரீதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், யாழ் பிராந்திய சரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின் வழிகாட்டுதலில் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரின் நெறிப்படுத்தலில் கீழ் நேற்றிரவு (27-12-2023) யாழ்ப்பாண நகர பகுதியில் பொலிஸாரால் விசேட போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையப் பகுதி மற்றும் யாழ் நகர்ப்பகுதி வர்த்தக நிலையங்களிலும் யாழ்ப்பாண பொலிஸாரினால் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதைப் பொருள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.