யாழ்ப்பாணம், வத்திராயன் – மருதங்கேணி பகுதியில் 108 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இன்று (31) அதிகாலை இராணுவம் மற்றும் நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது.
இவற்றின் பெறுமதி 21.6 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, படையினர் 54 பொதிகளிலிருந்து 108 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையை மீட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

