யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, தீருவில் திடலில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எழுத்து மூலம் அனுமதி கோரி இருந்த நிலையில் , நகரசபை தலைவர் அதற்கு மறுத்திருந்தார்.
இந்நிலையில், சபை உறுப்பினர்கள் சபையை கூட்டி அது தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் என நகர சபை தலைவரிடம் கோரியதை அடுத்து சபைக்கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து, சுகாதார நடைமுறைகளுடன் நிகழ்வினை நடாத்துவதற்கு அனுமதிப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஒலிபெருக்கி சாதனங்கள் பயன்படுத்துவதாயின் அதற்காக மாத்திரமே பொலிஸாரிடம் அனுமதி கோருவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

