யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் அமைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் மக்கள் செயல் என்ற அமைப்பினால் ”அணையா விளக்கு” போராட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்ட அணையா விளக்கு துபியே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.