யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
இன்று தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விடுதி வளாகத்திற்குள் குறித்த முதலை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்ட முதலை யாழ் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.