யாழ்ப்பாணம்- அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ வீரர்களை, பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கார் ஒன்றில் இருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்துள்ளனர்.
இதனால் அவர்களை வழிமறித்த அப்பகுதி மக்கள், அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது,† தாம் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.
மேலும், தாம் இயக்கச்சி இராணுவ முகாமில் கடமையாற்றுபவர்கள் என்றும்† தற்போது விடுமுறையில் இப்பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்னர்.
அதில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள்,† வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருவரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அதன்பின்னர் இருவரையும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற பொலிஸார், இருவரும் இராணுவத்தில் தற்போதும் கடமையாற்றுபவர்கள் என்பதனை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
இதேவேளை விடுமுறையில் சென்றவர்கள் எதற்காக அராலி பகுதிக்கு காரில் சென்றனர் என்பது தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம்- அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ வீரர்களை, பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Previous Articleநியூரியில் 66,000 பவுண்டுகள் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
Next Article இன்றைய ராசி பலன் – 10/10/2021