யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு (07-01-2025) இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞனே, சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போது மட்டுவில் பகுதியில் வைத்து 50 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.