உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை புனித நகரை சேர்ந்த 34 வயதான கோணேஸ்வர ராசா நிஷாந்தன் என்பவரே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26-04-2024) உயிரிழந்துள்ளார்.
அவருக்கு உடலில் கட்டி இருப்பதாக கடந்த புதன்கிழமை (24) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் குறித்து நேற்று (27) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, உடற்கூற்று பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா மேற்கொண்டுள்ளார்.