வடமாகாணத்தில் பல மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கும் உள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் மட்டும் தீவிரமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் (01-01-2024) மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ்ப்பாண வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் த. சத்தியமூர்த்தி ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இதன்போது, அதிகரித்துள்ள டெங்கு தாக்கம் தொடர்பிலும் அதை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.