யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு இளைஞரும் டெங்கு காச்சலால் உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன் ஒருவர் , யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (27) பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்குள்ளாகி , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மூளை சாவடைந்துள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதேவேளை கடந்த திங்கட்கிழமை (25) 11 மாத குழந்தை டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளது.
அத்துடன், கடந்த சனிக்கிழமை (23) டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.