யாழில் 15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் 18 வதான இளைஞன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இளைஞனும் சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதுடன், இளைஞன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.