யாழ்.வசாவிளான் பகுதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் நேற்று தினம் வியாழக்கிழமை (24) வங்கிக்கு சென்ற சமயம் வீட்டில் இருந்த 20 பவுண் தங்க நகை கொள்ளையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமரா தொகுதிகளையும் திருடர்கள் பிடுங்கி சென்றுள்ளனர். திருடப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 20 இலட்ச ரூபாய் என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.