யாழில் உள்ள பகுதியொன்றில் முதியவர் ஒருவர் வீதியால் நடந்து சென்ற பொழுது அவ்வழியாக சென்ற வாகனம் அவருக்கு உதவியதோடு வாகனத்திலிருந்த இருவர் முதியவரிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் பூநகரி முற்கம்பம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீதியால் நடந்து சென்ற முதியவரை ஏற்றி சென்று முதியவர் இறங்கும் பகுதி வந்த பொழுது வாகனத்தை நிறுத்துமாறு கூறிய பொழுதும் வாகனத்தை நிறுத்தாது சற்று தூரம் சென்று முதியவரிடமிருந்து தங்கச் சங்கிலி காப்பு மோதிரம் தோடு என்பவற்றை அபகரித்துக் கொண்டு முதியவரை நடுவீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அக்கறையான் பொலிஸ் மற்றும் மாங்குளம் வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய புளியங்குளம் பொலிஸார் வீதிச் சோதனையின் மூலம் வாகனத்தை மடக்கி பிடித்துள்ளனர்.
மேலும் வாகனத்தில் பயணித்த 2 சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது முதியவர் கூறிய பெண் அவர்கள் பயனித்த காரில் காணப்படவில்லை.
இரு சந்தேக நபர்களும் பூநகரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக பூநகரி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.