யாழில் வீதியால் சென்றவரை கட்டிவைத்து தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் வட்டுக்கோட்டை டச்சு வீதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அதிகாலை வீதியால் சென்றவரை மூவர் வழிமறித்து, எங்கே செல்கிறார் என விசாரித்து விட்டு, வீதியில் கட்டிவைத்து தாக்கிய பின்னர் அவர்கள் தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டுகின்றது.
இந்நிலையில் காயமடைந்தவரை பிரதேச இளைஞர்கள் மீட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது