யாழ். திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த வன்முறை கும்பல் அங்கிருந்த வாகனங்கள் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தின் போதும், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் நொருக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளொன்றும் எரியூட்டப்பட்டது.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முரண்பாடே தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.