யாழ்ப்பாணத்தில் வாழைக்குற்றிகளுக்கு திடீரென மவுசு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் கார்த்திகை தீப திருநாள் இன்றைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்துக்கள் வீடுகளில் தீபமேற்றி வழிபடுவார்கள்.
அதில் ஒரு அங்கமாக தங்களது வீடுகளுக்கு முன்னால் வாழைக்குற்றியை நட்டு அதன் மேல் சட்டியில் எண்னெய் ஊற்றி, திரி வைத்து தீபமேற்றுவார்கள்.
இதன் காரணமாக யாழ்.நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வாழைக்குற்றிகளை சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி ஒரு வாழைக்குற்றி 50 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரையில் விற்பனை செய்வதுடன், இம்முறை சிட்டிகளும் பல வர்ணங்கள் மற்றும் வடிவமைப்பில் விற்பனை செய்யப்படுகின்றது.