யாழ்ப்பாணம் – அரசடி மற்றும் பழம் வீதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசடி மற்றும் பழம் வீதியில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலால் வீடுகள் மற்றும் சொத்துகள் சேதமாக்கப்பட்டிருந்தன.
அதோடு தாக்குதலின்போது படுகாயமடைந்த பழம் வீதியைச் சேர்ந்த இளைஞரொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.