ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உள்பட மூவர் நெல்லியடி பொலிஸாரினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரணவாய் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடிய போதே 30 வயது பெண்ணும் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 20 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞரில் ஒருவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்றும் மற்றைய இளைஞரும், பெண்ணும் கரணவாய் சமரபாகு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.