யாழ்ப்பாணம், அராலி வடக்கு பகுதியில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சிவகரன் மயூரா என்ற இளம் பெண்ணே இன்றையதினம் (10-06-2024) உயிரிழந்துள்ளார்.
மேலும், குறித்த பெண்ணின் தந்தையும், அண்ணாவும் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் அவரும் இன்று இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

