யாழ்.பருத்தித்துறை – சுப்பர்மடத்தில் இன்று காலை பொதுமக்களால் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் சுப்பர்மடம் முனியப்பர் ஆலயத்திலிருந்து மேளதாள வாத்திய இசையுடன் சுப்பர்மடம் பொதுநோக்கு மண்டபத்திற்கு மாவீரர்களின் பெற்றோகள் அழைத்துவரப்பட்டனர்.
அங்கு வைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் திருவுருவ படங்களுக்கு ஈகைச்சுடர்கள் ஏற்ப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கப்பட்டது.