வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று காலை, விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை மற்றும் கிருமிநாசினி இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் உரும்பிராய் கமநல சேவை நிலையத்துக்கு முன்பாக விவசாயிகள் மேற்கொள்ள இருந்த போராட்டத்தை, பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிறுத்தியுள்ளனர்.
அத்துடன், போராட்டத்துக்கு வந்திருந்தவர்களை இராணுவத்தினரும் கோப்பாய் பொலிஸாரும் அச்சுறுத்திய நிலையில், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து சீருடை தரித்தவர்களின் அச்சுறுத்தல் காரணமாக, போராட்டத்தை மேற்கொள்ள முடியாமல் போனதாக, போராட்டத்துக்கு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.