யாழ்.பாசையூர் கடலில் இன்று காலை பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சுமார் 1300 கிலோ மஞ்சள் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து மஞ்சள் கடத்தி வரப்படுவதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த முற்றுகை நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது இருபத்தி நான்கு மூடைகளில் அடைக்கப்பட்ட மஞ்சள் பொதிகளும் படகும் கைக்கப்பட்டுள்ளதுடன், சமவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குருநகரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூடைகள் சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.