யாழ் மல்லாகம் பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று திங்கள் காலை (1) வலிவடக்குபிரதேச சபையில் சாரதியாக பணிபுரிந்து வரும் இளைஞர் வீட்டில் விபரீத முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
சம்பவத்தில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் பிரசன்னா வயது 28 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் .
மல்லாகம் ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தின் வீரரான குறித்த இளைஞர் விளையாட்டில் சிறந்த வீரர் என்றும் கூறப்படுகின்றது. சடலம் உடல் கூற்று சோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இளஞர் உயிரிழந்தமைக்கான காரண,ம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.