யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 17 நாட்களான குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதனடிப்படையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக மேலதிக நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டிருக்கின்றனர்.