நேற்றையதினம் ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு அதிகளவான மக்கள், யாழ்.கீரிமலை பகுதிக்கு பிதிர்க்கடனை நிறைவேற்றுவதற்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் கொரோனா சட்டத் திட்டங்களை மீறி ஒன்றுக்கூடியமையினால் அப்பகுதிக்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் அன்டிஜன் பரிசோதனையை சுகாதார பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை கொரோனா அச்சம் காரணமாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக ஆலயங்களுக்கு வெளியே அதிகளவான பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.