யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று (12) வெள்ளிக்கிழமை பயணித்த பஸ்ஸில், கைதடி பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் ஏறியுள்ளனர்.
பின்னர், இந்த இளைஞர்கள் இருவரும் அரியாலை பகுதியில் வைத்து பஸ்ஸில் இருந்து இறங்கி , நடத்துனருடன் முரண்பட்டபோது, சாரதியும் , பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் , அவர்களை சமரசப்படுத்த முயன்றுள்ளனர்.
இதன்போது, இந்த இரு இளைஞர்களும் , திடீரென தாம் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து , அங்கிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலில் சாரதி மற்றும் பயணி ஆகியோர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.