சிறைக் கைதிகளும் மனிதர்களே எனும் தொனிப் பொருளில் யாழ் சிறைச்சாலையில் காத்திருப்போர் மண்டபமொன்று, யாழ்ப்பாண சிறைச்சாலை முன்றலில் இன்று திறந்து வைக்கப்பட்டது .
யாழ் சிறைச்சாலையில் உள்ள தமது உறவுகளை பார்வையிட வரும் உறவினர்கள், வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைகாணப்பட்டது.
யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகரினால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் , காத்திருப்போர் மண்டபம் ஒன்று அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கமைய யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தியின், முயற்சியால் அறக்கட்டளை நிதியம் ஒன்றின் நிதிப் பங்களிப்பில் காத்திருப்போர் மண்டபம் இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது நிகழ்வில் சமாதானத்தை வலியுறுத்தி சமாதானப் புறாவும் பறக்கவிடப்பட்டது.