யாழ்ப்பாணத்தில் மதுபோதையின் உச்சத்தின் தாயாரை கொடூரமாக தாக்கிய குடிகார மகனை, துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கைது செய்த சம்பவம் இன்று காலை கோண்டாவில், செபஸ்ரியன் வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
மதுபோதையின் உச்சத்தில் பொலிசாரை வாளால் வெட்ட முயன்ற போதே, பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். எனினும் இளைஞரை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மதுபோதையில் இருந்த குறித்த இளைஞன் தனது தாயாருக்கும், அயல்வீட்டினருக்கும் சரமாரியாக தாக்கியதையடுத்து, சம்பவம் குறித்து பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிசாரை வெட்டுவதற்கு குறித்த இளைஞர் வாளை எடுத்துக் கொண்டு ஓடி வந்த நிலையில் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்த பொலிஸார் இளஞரை கைது செய்ததாகவும் கூறப்படுகின்றது.
மேலும் கைதான நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.