யாழில் உள்ள ஸ்ரான்லி வீதி, ஈபிடிபி அலுவலகத்துக்கு எதிரே அமைந்துள்ள திறந்தவெளி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் நள்ளிரவு தீப்பற்றி எரிந்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுக்கடங்காமல் குறித்த கடை முழுவதும் பரவி பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் கருகியுள்ளன.
விற்பனை நிலையம் தீப்பற்றி எரிவதை அவதானித்த மக்கள் அணைக்க முற்பட்ட போதும் அது முடியாமல் போயுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் விற்பனையாகும் கடையென்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அவ்விடத்துக்கு சற்றுமுன் விரைந்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.