யாழ் நகர் பகுதியில் உள்ள கட்டடத் தொகுதியொன்றில் நேற்றிரவு(27) இரண்டு கடைகள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்ரப்பி ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்தில் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.