யாழ்.உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று காலை மருதனார் மடத்திலிருந்து கோப்பாய் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடற்படையின் வாகனமனது, பலாலி வீதியால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் இடம்பெற்றபோது உரும்பிராய் சாந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த ராணுவ சிப்பாய், குறித்த சம்பவம் தொடர்பில் கடற்படையினரிடம் பதிவுகளை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கோப்பாய் பக்கமாக வேகமாக வந்துகொண்டிருந்த ஹயஸ் வாகனம் இராணுவ சிப்பாயையும் கடற்படையினர் பயணித்த விபத்துக்குள்ளான வாகனத்தையும் மோதித் தள்ளியது.
இச்சம்பவத்தில் இராணுவ சிப்பாயின் கால்கள் முறிந்தது என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.