யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் குடும்பஸ்தர் ஒருவரை மருதங்கேணி பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த குடும்பஸ்தர் சமீப காலமாக பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய மனைவி பலமுறை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் (14-02-2024) நபரொருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயப்படுத்திய நிலையில் குறித்த குடும்பஸ்தரை மருதங்கேணி பொலஸார் தேடிவந்துள்ளனர்.
இன்றும் அவரது வீட்டில் மனைவியை தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில் அவரது மனைவி வேறு இடத்தில் உயிர்பாதுகாப்புக்காக தஞ்சம் கோரியுள்ளார்.
தான் உயிர்மாய்ப்பு செய்யப் போவதாக குடும்பஸ்தர் தனது வீட்டின் சுவரெங்கும் எழுதிவைத்துள்ளதுடன் மனைவி, பிள்ளைகளை கொடூரமாக தாக்கி அச்சுறுத்திவந்ததால் மனைவியின் முறைப்பாட்டிற்கு அமைய சற்றுமுன்னர் மருதங்கேணி பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தனது கணவன் மீது பல்வேறு முறைப்பாடுகள் உள்ளதால் தனக்கும், தனது பிள்ளைக்கும் உயிர் பாதுகாப்பு தேவை என மருதங்கேணி பொலிசாரிடம் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தனது கணவனை நீதிமன்றில் உற்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு முற்படுத்தி மனநல காப்பகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.