யாழ்.ஊர்காவற்றுறை – சுருவில் பகுதியில் காலைகடன்களை கழிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி நேற்றய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை – விமலகுமார் (வயது61) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காலை கடன்களுக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டிருந்த அந்நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
இதனையடுத்து சடலத்தை மீட்டுள்ள பொலிஸார் அதனை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். மேலும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது