யாழில் சட்டவிரோதமான முறையில், மாடுகளை வாகனத்தில் கடத்தி சென்ற குற்றச் சாட்டில் நபரொருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ்.நகரை நோக்கிப் பட்டா ரக வாகனத்தில் குறித்த மாடுகள் கடத்திச் செல்லப்பட்டுள்ள நிலையில், மண்டைதீவு சந்தியில் வைத்து பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மாடுகளை கடத்திய குற்றத்தில் வாகன சாரதியை கைது செய்த பொலிஸார் பட்டா வாகனத்தையும், மாடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.