யாழிலிருந்து காரில் கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உட்பட 3 பேர் மாங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
A-9 வீதியில் கஞ்சா கடத்தப்படுவது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மாங்குளம் பொலிஸார் காரை வழிமறித்து சோதனையிட்டனர். இதன்போது, 6 கிலோ கஞ்சாவை மீட்கப்பட்டதுடன் , காரில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளார்கள்.
அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் புத்தளத்தினை சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் நெச்சிகாம பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய நபரும் யாழ் கொடிகாமம் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.