யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நரியிட்டான் பகுதியில் போதை மாத்திரைகளை வைத்திருந்த இளைஞன் ஒருவரை அக் கிராமத்து இளைஞர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
குறித்த இளைஞன் 8 போதை மாத்திரைகளை வைத்திருந்தவேளை இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
மணற்புலம் – அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
பிடிக்கப்பட்ட இளைஞன் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் செயலை செய்த இளைஞர்களின் முன்மாதிரியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.