யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்கி தருவதாகக் கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு நபரொருவர் தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வயோதிப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றுள்ளார்.
இந்நிலையில், அங்கு வந்த இளைஞரொருவர் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. உடனடியாக மண்ணெண்ணெய் வாங்கி தருவதாகக் கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தையும், போத்தலையும் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்றவர்கள் ஊடாக நழுவி தப்பியோடியுள்ளார்.
நீண்ட நேரமாக மண்ணெண்ணைக்காகக் காத்திருந்த பெண், தான் காசு கொடுத்த இளைஞரை காணாது, ஏமாற்றத்துடன் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.