யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலையில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில், பாடசாலை வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் வயது 29 இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு வைத்தியசாலை கொண்டுவரப்பட்டது.
பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
உடல்மீதான உடற்கூற்று பரிசோதனையில் நியூமோனியா தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.