யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்ப்ட்ட நான்கு பேரை இராணுவத்தினர் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டவர்களை இன்று அதிகாலை 01 மணியளவில் தொண்டமனாறு பகுதியில் வைத்து ராணுவத்தினர் கைது செய்து வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் என்றும் மற்ற இருவர் வவுனியா பகுதியை சேர்ந்தவர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நான்கு பேர் தொண்டமனாறு கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொணடதையடுத்து இராணுவத்தினரின் விசாரணையை அடுத்து அவர்கள் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டது தெரைியவந்துள்ளது.
மேலும் இந்நபர்கள் அவுஸ்திரேலியா செல்ல தலா 3 லட்சம் ரூபாய் கூட்டிச்செல்வோருக்கு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.