யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இராணுவச் சீருடைகளை உடைமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின்படி இன்று இளைஞன் கைது செய்யப்பட்டார்.
அவர் முன்னர் இராணுவத்தில் பணியாற்றியவர். பின்னர் ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டவர்.
இராணுவ பணியிலிருந்து விலகும் போது, இராணுவ சீருடையை ஒப்படைக்காமல், தனது உடைமையில் வைத்திருந்த போதே சிக்கியுள்ளார்.

