யாழில், சமூர்த்தி உத்தியோகஸ்தர் எனக் கூறி திருட்டில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் திருட்டில் ஈடுபட்டுவந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் பயணிக்கும் முதியவர்களிடம் தன்னை சமூர்த்தி உத்தியோகஸ்தராக அறிமுக்கப்படுத்திக்கொண்டு , அவர்களுக்கு உதவி திட்டங்கள் வழங்குவதாக ஆசைவார்ச்சை கூறி , அவர்களின் நகைகள் உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடித்து வந்துள்ளார்.
இவ்வாறாக நான்கு சம்பவங்கள் பதிவாகி இருந்த நிலையில் பொலிஸார் இது குறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து இதுவரை 10 பவுன் பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்