யாழில் இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடற்றொழிலாளர்களால் நேற்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம், பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்கம், அனலைத்தீவு கடற்றொழிலாளர் சங்கம், நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கம், இன்பற்றி கடற்றொழிலாளர் சங்கம் நயினா தீவு , பாசையூர் கடற்றொழிலாளர் சங்கங்கள் உள்ளிட்ட மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதனையடுத்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

